மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Wednesday 22 February 2012

சில தருணங்களில்... சில தவறுகள்...! - கவிதை

உங்கள் மனதை வருடும் மயிலிறகாய் இந்த கவிதை இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.







சில தருணங்களில்... சில தவறுகள்...!

இப்படி ஒரு திருமணத்தை
எங்கள் ஊர் பார்த்ததில்லை.
இனி பார்க்கப் போவதுமில்லை!

விருந்தில்,
இனிப்பு முதல் துவர்ப்பு வரை
எச்சுவைக்கும் பஞ்சமில்லை...

ஆடலும், பாடலும்
எல்லோரையும்
திகைக்க தான் வைத்தது!

உற்றார் உறவினர்
அனைவருக்கும் புத்தாடைகள்
அவரவர் விருப்பத்திற்கேற்ப...

பந்தலுக்குள் மட்டும்
தோரணமில்லை
ஊர் முழுக்க
அனைவரும் வாய் பிளக்க!

சீதனத்தைப் பார்த்து
மயங்கி விழுந்தவர்களை
விடுபடாமல்
எண்ண முடியவில்லை!

ஊர் மெச்சி பேசுவதை
கேட்க, கேட்க
களைப்பு
காணாமல் போகிறது...

கையிலிருந்த காசெல்லாம்
கரைந்துப் போனாலும்
மனசு
நிறைந்துப் போகிறது!

இத்தனைக்கும் பிறகு_
கலங்கிய விழிகளுடன்
மகள்
மறுவீடு கிளம்பும் போது
மனசு அடித்துக் கொள்கிறது

‘அவள் ஆசைப்பட்டவனுக்கே
கட்டிக் கொடுத்திருக்கலாமோ...!?’



உங்கள் மனதை வருடும் மயிலிறகாய் இந்த கவிதை இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.







சில தருணங்களில்... சில தவறுகள்...!

இப்படி ஒரு திருமணத்தை
எங்கள் ஊர் பார்த்ததில்லை.
இனி பார்க்கப் போவதுமில்லை!

விருந்தில்,
இனிப்பு முதல் துவர்ப்பு வரை
எச்சுவைக்கும் பஞ்சமில்லை...

ஆடலும், பாடலும்
எல்லோரையும்
திகைக்க தான் வைத்தது!

உற்றார் உறவினர்
அனைவருக்கும் புத்தாடைகள்
அவரவர் விருப்பத்திற்கேற்ப...

பந்தலுக்குள் மட்டும்
தோரணமில்லை
ஊர் முழுக்க
அனைவரும் வாய் பிளக்க!

சீதனத்தைப் பார்த்து
மயங்கி விழுந்தவர்களை
விடுபடாமல்
எண்ண முடியவில்லை!

ஊர் மெச்சி பேசுவதை
கேட்க, கேட்க
களைப்பு
காணாமல் போகிறது...

கையிலிருந்த காசெல்லாம்
கரைந்துப் போனாலும்
மனசு
நிறைந்துப் போகிறது!

இத்தனைக்கும் பிறகு_
கலங்கிய விழிகளுடன்
மகள்
மறுவீடு கிளம்பும் போது
மனசு அடித்துக் கொள்கிறது

‘அவள் ஆசைப்பட்டவனுக்கே
கட்டிக் கொடுத்திருக்கலாமோ...!?’





2 comments:

விச்சு said...

ஒரு தந்தையின் எண்ணம் மகளின் விருப்பத்தினைப்பற்றி அருமையாக உள்ளது.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நன்றி விச்சு சார்!