மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Wednesday, 8 February 2012

நினைவுகள் - கவிதை

அதிகாலையில் விழிப்பு வருகிறது. ஏனோ தெரியவில்லை, மனசு முழுக்க பாரம். விடை தெரியாமலே விழிகளில் கசிகிறது ஈரம். துவண்டு மீண்டும் படுக்கையில் சரிகிறேன்... இந்த கவிதையை பிரசவிக்கிறேன்!

நினைவுகள்...!



நீ
நட்ட செடி
மரமாய் நிற்பதைப் பார்த்து
கட்டி, கட்டியணைப்பேன்.
புயலில் அது சாய்ந்துப் போனது!

உன் பழைய
மிதியடியொன்றை
தலையணையாய் வைத்திருந்தேன்.
எங்கேயோ தொலைத்து விட்டேன்!

தவறி நீ விட்டுச் சென்ற
உன் அரைக்கை சட்டையொன்று.
ஆசையாய் துவைத்து, துவைத்து
கந்தலாகிப் போனது!

பள்ளிப் பருவத்தில்
நீயிருந்த கருப்பு வெள்ளை படமொன்று.
கரையான் அரித்து விட்டது.

இவையாவும்
போக -
 
இன்னும் என்னிடம்
உன் நினைவாய் இருப்பது,

நீ
எட்டி உதைத்த நெஞ்சின் வலியும்...
உன்னை ஈன்ற போது உண்டான
அறுவைசிகிச்சையின் தழும்பும்...


உங்களிடம் மன பாரத்தை இறக்கி வைத்த நிம்மதியில், மறுபடியும் உறங்கிப் போகிறேன். எப்போது விழிப்பேன் என தெரியாமலே...  

 
அதிகாலையில் விழிப்பு வருகிறது. ஏனோ தெரியவில்லை, மனசு முழுக்க பாரம். விடை தெரியாமலே விழிகளில் கசிகிறது ஈரம். துவண்டு மீண்டும் படுக்கையில் சரிகிறேன்... இந்த கவிதையை பிரசவிக்கிறேன்!

நினைவுகள்...!



நீ
நட்ட செடி
மரமாய் நிற்பதைப் பார்த்து
கட்டி, கட்டியணைப்பேன்.
புயலில் அது சாய்ந்துப் போனது!

உன் பழைய
மிதியடியொன்றை
தலையணையாய் வைத்திருந்தேன்.
எங்கேயோ தொலைத்து விட்டேன்!

தவறி நீ விட்டுச் சென்ற
உன் அரைக்கை சட்டையொன்று.
ஆசையாய் துவைத்து, துவைத்து
கந்தலாகிப் போனது!

பள்ளிப் பருவத்தில்
நீயிருந்த கருப்பு வெள்ளை படமொன்று.
கரையான் அரித்து விட்டது.

இவையாவும்
போக -
 
இன்னும் என்னிடம்
உன் நினைவாய் இருப்பது,

நீ
எட்டி உதைத்த நெஞ்சின் வலியும்...
உன்னை ஈன்ற போது உண்டான
அறுவைசிகிச்சையின் தழும்பும்...


உங்களிடம் மன பாரத்தை இறக்கி வைத்த நிம்மதியில், மறுபடியும் உறங்கிப் போகிறேன். எப்போது விழிப்பேன் என தெரியாமலே...  

 


4 comments:

rajamelaiyur said...

அழகிய கவிதை


இன்று

யுவராஜ்சிங்கிற்கு நுரையீரலில் கேன்சர் கட்டியா ?

இடைவெளிகள் said...

ஜோக்ஸ் எழுதி கலக்கி வரும் நீங்கள் கவிதையிலும் கலக்கியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்

இடைவெளிகள் said...

நிறைவான கவிதை

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

மிக்க நன்றி சார்!