மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Sunday, 19 February 2012

திருவிழா - கவிதை

இது கிராமத்து திருவிழாவை வைத்து எழுதப்பட்ட கவிதை. உங்களுக்கு பிடிக்கும் என்கிற நம்பிக்கையில்...




திருவிழா
விருந்தாளி வந்ததும்
வெறிச்சோடிப் போகிறது
வெள்ளாடு
இருந்த இடம்.

சிறைப்பட்டுக் கிடந்த
பட்டு துணிகளுக்கு
விடுதலை.

கன்னிப்பெண்களின்
குறும்புப் பார்வையில்
களை கட்டுகிறது
திருவிழா.

வீதிஉலா வரும்
வீர அய்யனாருக்கு
வி.ஐ.பி. அந்தஸ்து.

வானவேடிக்கை
அசலூர்
வாய்பிளப்பது
வாடிக்கை.

வேட்டு சத்தத்தில்
எடுபடாமல் போகிறது
வெட்டுப் பட்டவனின்
அழுகுரல்.

சாராய வியாபாரியின்
வீட்டில்
இண்டு இடுக்கெல்லாம்
பணம்.

நேர்த்திக்கடன்
இல்லாமலே
மண்சோறு சாப்பிடுகிறார்கள்
கிழிந்த அன்னதானப் பொட்டலம்.

மூன்றாண்டுகளுக்கு
முன் நடந்த திருவிழாவின்
வரவு செலவைப் பார்க்க
உட்காருகிறது ஒரு கூட்டம்.

இனி தான்
தெரியும்...
ஊனமுற்றவர்களின் 
எண்ணிக்கை!


இது கிராமத்து திருவிழாவை வைத்து எழுதப்பட்ட கவிதை. உங்களுக்கு பிடிக்கும் என்கிற நம்பிக்கையில்...




திருவிழா
விருந்தாளி வந்ததும்
வெறிச்சோடிப் போகிறது
வெள்ளாடு
இருந்த இடம்.

சிறைப்பட்டுக் கிடந்த
பட்டு துணிகளுக்கு
விடுதலை.

கன்னிப்பெண்களின்
குறும்புப் பார்வையில்
களை கட்டுகிறது
திருவிழா.

வீதிஉலா வரும்
வீர அய்யனாருக்கு
வி.ஐ.பி. அந்தஸ்து.

வானவேடிக்கை
அசலூர்
வாய்பிளப்பது
வாடிக்கை.

வேட்டு சத்தத்தில்
எடுபடாமல் போகிறது
வெட்டுப் பட்டவனின்
அழுகுரல்.

சாராய வியாபாரியின்
வீட்டில்
இண்டு இடுக்கெல்லாம்
பணம்.

நேர்த்திக்கடன்
இல்லாமலே
மண்சோறு சாப்பிடுகிறார்கள்
கிழிந்த அன்னதானப் பொட்டலம்.

மூன்றாண்டுகளுக்கு
முன் நடந்த திருவிழாவின்
வரவு செலவைப் பார்க்க
உட்காருகிறது ஒரு கூட்டம்.

இனி தான்
தெரியும்...
ஊனமுற்றவர்களின் 
எண்ணிக்கை!




2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நிதர்வன கவிதை....


எல்லா இடங்களிலும் இப்படித்தான் கணக்கு வழக்கில் துவங்குகிறது பிரச்சனை...

நல்லதொரு படைப்பு

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

உங்கள் பாராட்டிற்கு என் பணிவான நன்றி