'மொக்கை' முனுசாமியின் கேள்விகளுக்கு
உங்களால் பதில் சொல்ல முடியுமா
என்று முயற்சி செய்து பாருங்கள்!
உங்களால் பதில் சொல்ல முடியுமா
என்று முயற்சி செய்து பாருங்கள்!
சரி, கேள்விகளைப் பார்க்கலாம்...
* ஜெயலலிதா, சோனியா சேர்ந்து கடைசியாக பார்த்த தமிழ்ப் படம் எது?!
*டோனி விஜய.டி.ராஜேந்தர் வீ்ட்டிற்கு வந்த போது இருவரும் எதைப் பற்றி பேசினார்கள்?!

*சூர்யா பத்மினியுடன் சேர்ந்து ஆடிய டூயட் பாடலை பாடிய பாடகர், பாடகி யார்?!
*எம்.எஸ்.விஸ்வநாதன் கடைசியாக இசை அமைத்த சிம்பு படம் எது?!
*தேவர் பிலிம்ஸ் தயாரித்து தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் எது?!

*பவர் ஸ்டார் படங்களின் தொடர் வெற்றிக்கு காரணம் என்ன?!
*எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் தமன்னா, விஷால் நடித்த படம் எது?!

*எம்.ஜி.ஆர்., அனுஷ்கா ஜோடி சேர்ந்து நடித்த கடைசிப் படம் எது?!

*சிவாஜிகணேசனுக்கு அஸின் மகளாக நடித்த படம் எது?!
*ஏ.ஆர்.ரகுமான் இசையில் சாந்தனு பாக்யராஜுக்கு சீர்காழி கோவிந்தராஜன் பின்னணி பாடிய படம் எது?!
*அம்பிகா, பாக்யராஜ் நடித்து சன் பிகசர்ஸ் வெளியிட்ட படம் எது?!
* விஜயசாந்தி நடித்து அமர்களமாய் தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் தெலுங்கு டப்பிங் படம் எது?!
* விஜயகாந்த் நடித்து தற்சமயம் வெள்ளி விழா கொண்டாடிய படம் எது?!
* இளையராஜா இசையில் ராமராஜன், ராஜ்கிரண் நடித்து வெற்றிகரமாக தமிழகத்தில் ஓடிக் கொண்டிக்கும் படங்கள் எவையவை?!
என்னங்க, கேள்விகளுக்கு எல்லாம் விடை தேடிக்கிட்டு இருக்கிங்களா?... அடுத்த பதிவு போடறதுக்குள்ள பதிலை கண்டுப்பிடிச்சுடுங்க!