மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Thursday 22 December 2011

டிரைலர் - பொங்கல் படங்கள்

  பொங்கல் படங்கள் - ஒரு கண்ணோட்டம்!
                                       (ஹி.. ஹி... இது நம்ம கற்பனைப் படங்கள்)

சாட்டை 
டைட்டிலைப் பார்த்து இது பக்கா ஆக்ஷன் படம்ன்னு நினைச்சா, நீங்க ஏமாந்துப் போவிங்க. இது ஒரு ஆன்டி சென்டிமென்ட்  படம். ஹீரோ ரிஸ்க் எடுத்திருக்கிறார், தயாரிப்பாளர் செலவுல! ரொம்ப ரொம்ப வெகுளியா நடிக்கிற ஹிரோவுக்கு லவ் பண்றது எப்படின்னு ஹிரோயின் சொல்லித்தறது புதுமையா இருக்கு. ஆனா, ஹிரோயின் மொக்கை ஃபிகரா இருக்கறதாலையோ என்னவோ ஹீரோவுக்கு கடைசி வரை லவ்வே வரலை. வாழ்க்கையே வெறுத்துப் போகும் ஹிரோயின் இவன்கூட வாழறதை விட சாவறதே மேல்ன்னு ஹீரோ கண் முன்னே செத்துப் போறாங்க. இதனால் சாட்டையை தன் உடம்பில் அடித்து பிழைப்பு நடத்தும் ஹீரோ, அதே சாட்டையால் தன்னை அடித்து அடித்து உயிர் விடுகிறார்.  

கொள்ளி 
தயாரிப்பாளர் தன் செலவுல தனக்கு தானே வைச்சுக்கிட்ட கொள்ளி. ஹாலிவுட்டுக்கு நிகரான படம்ன்னு ஏன் விளம்பரப் படுத்தினாங்கன்னு படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலே தெரிஞ்சுடுது. ஹாலிவுட் படத்தோட கதையை திருடி இருக்காங்க. இருந்தும் படம் எடுபடாம போனதுக்கு காரணம் ஹீரோவுக்கு பெருந்தொகையை கொடுத்துட்டதால, டைரக்டர் உள்பட எல்லா டெக்னிசியன்களுக்கும் சம்பள பாக்கி வைச்சிருப்பாங்க போலிருக்கு. ஆளாளுக்கு தன் பங்குக்கு படத்தை தங்களால முடிஞ்ச வரைக்கும் கொதறி வைச்சிருக்காங்க!

ராசாத்தீ
இது ஹீரோயின் சப்ஜெக்ட் படம். ரொம்ப புரட்சிகரமான படமாவும் இருக்கு. (படவாய்ப்பே இல்லாம இருந்த நடிகை சொந்தக் காசுல சூன்யம் வைச்சுக்கிடாங்கன்னு தான் சொல்லணும்.) மனநலம் சரியில்லாத ஹீரோவை அஞ்சு பெண் ரவுடிங்க கடத்திட்டுப் போய் கற்பழிச்சி சாகடிச்சுட்டு ஹீரோயின் வீட்டு வாசல்ல கொண்ட வந்துப் போட்டுட்டுப் போயிடறாங்க. இதப்பார்த்து பதறிப் போற கதாநாயகி ராசாத்தி, 'இந்த அஞ்சுப் பேரையும் கண்டுப்பிடிச்சு நான் பழிவாங்கற வரைக்கும் யாருக்கும் நான் தொப்புள் காட்டமாட்டேன்'னு ஊர் ஜனங்க முன்னாடி சபதம் விடறா. அந்த சபதுத்துல ஜெயிக்கிறாளா?... திரும்பவும் அந்த ஊருக்கு அவ தொப்புளை காட்றாளான்னு வெள்ளித்திரையில் அல்லது திருட்டு சி.டி.யில் காண்க.  

# மொக்கராசு 
இது மதுரையில நடக்கிற காமெடிப் படம். காமெடிங்கற பேர்ல படத்துல எல்லாரும் அடிக்கிற கூத்து காதுல ரத்தம் வர வைக்குது. படத்துல கதைன்னு ஒண்ணு இல்லாதது பெரிய ஆறுதலா இருக்குது. வழக்கம் போல ஹீரோயினுக்கு அதிக வேலையில்லை. பாட்டுல மட்டும் வந்து தன் இடையோட அளவும், தொப்புளோட ஆழமும் எவ்வளவுன்னு காட்றாங்க!
சராசரி ரசிகர்களுக்கு அதுவே போதுமானதா இருக்குறதால, பொங்கல் படங்கள்ல தப்பிக்கிற வாய்ப்பு இந்தப் படத்துக்கு இருக்கு!

# சீ!
இது தெலுங்குப் படத்தோட தழுவல். அதுக்காக தெலுங்கு  நடிகையை ஹீரோ படம் முழுக்க தழுவிக்கிட்டே இருக்கனுமா என்ன?... படம் பாக்கற நமக்கு வயிறு எரியுது! ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லை. சீனுக்கு சீன் ஆக்ஷன் வேணுங்கறதால நாயகியுடன் நாயகன் பெட்ல இருக்கிற சீன்ல கூட ரெண்டுப் பேருக்கும் சண்டைகாட்சி வைச்சு ரகளைப் பண்ணியிருக்காங்க. அப்ப ஹீரோயின் அரைகுறை ஆடையுடன் இருப்பது ரசிகர்களுக்கு இனிய பொங்கல் விருந்து. கிளைமாஸ்ல ஹீரோ குரங்கு மாதிரி மரத்துக்கு மரம் தாவி ஃபைட் போட்டு, கடைசியில குரங்காவே மாறிடறது சிறுவர்களை கவரும்! 

# பாஸ்டர்ட் 
இங்கிலீஷ் டைட்டிலைப் பார்த்ததுமே இது ஹாலிவுட் படம்ன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். என்னக் கொடுமையின்னா, நம்ம ஆளுங்க இங்கிலீஷ் படத்தைப் பார்த்து உல்டா பண்றதைப் போல, இவங்க 'கரகாட்டக்காரன்' படத்தை உல்டா பண்ணி இந்தப் படத்தை எடுத்திருக்காங்க. யார் மேல இருந்த கடுப்புல இந்த டைட்டிலை வைச்சாங்கன்னு தான் புரியலை. கவுண்டமணி செந்தில் வாழைப்பழ காமெடியை, வெள்ளக்காரன் செர்ரி பழத்தை வைச்சு செய்யும் போது, இந்தப் படத்தை இங்க ரிலீஸ் பண்ணவனை கவுண்டமணி பாணியில திட்டனும் போல தோணுது!

         - ஐயோ சாமி... இதுக்கு மேல படத்தைப் பாக்கிற சக்தி நமக்கு இல்லாததனால் இத்தோடு உங்களுக்கு கும்புடு போட்டுக்கறோம்!

படங்களைப் பார்த்து புண்பட்டவர்:  - எஸ்.எஸ்.பூங்கதிர்,
                                                                   
No comments: