மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Sunday, 8 January 2012

இதெல்லாம் நாளைக்கு சரித்திரத்துல வரும்...இந்த 'ஜோக்கூ'வை மாணவர்கள் எல்லாம் நோட்ஸ் எடுப்பாங்க...


பயம்
 
சாதாரணமாய்
அழ ஆரம்பித்த
குழந்தை
கதறி அழுகிறது...
அம்மாவின் தாலாட்டைக் கேட்டு!
*********************


முரண்பாடு
 
புடவையை
அவிழ்க்கும் போது
மனைவி வெட்கப்பட்டாள்...
அதை துவைக்கும் போது
கணவன்  வெட்கப்பட்டான்!
***********************

ப்ரா
 
சின்னதை
பெரியதாய் காட்டும்
மாயக்கண்ணாடி!
***************************
அடி
 
அப்பா அம்மா
விளையாட்டில்
அப்பாவாய் இருந்த அப்பாவிக்கு
உடம்பெல்லாம் காயம்! 
**************************


காதலியே...
உனக்காக
காத்திருக்கும்
போது தான்
என் மனைவியின்
அருமை புரிகிறது!