மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Tuesday, 31 January 2012

காதலர் தின முன்னோட்டம்...


சின்ன இடையில் மலர்ந்த கொடி…




இதயத்திற்கு
ரத்தம் போகும் பாதையில்
எனக்கு அடைப்பு இருக்கிறதாம்…
என் நெஞ்சோரமாய் வந்து
உன் மூச்சுக் காற்றை எனக்குள் விடு!
அடைப்பு, அடைப்பு குறிக்குள் போய்விடும்!




நீ இங்கே தான்
ஒளிந்திருக்கிறாய்…
அதனால் தான்
இந்த இடம் இவ்வளவு
அழகாய் இருக்கிறது…!




என் ஒவ்வொரு
எழுத்திலும் நீ தான்
ஒளிந்திருக்கிறாய்…
உன் சுவாசம் தான்
என் பேனாவில்
‘மை’யாய் ஆகிறது…!



 
கதிரவன் கூட
உன் முகத்தில் விழிக்க தான்
ஆசைப்படுகிறான்…
என்னைப் போலவே!



உடைகள் மாறினாலும் உன் உறங்கும்
அழகு மாறுவதில்லை.
அதை ரசிப்பதற்காகவே
விடியும் வரை விழித்திருப்பேன்…
உன் அருகில் நானிருக்க
நீ சம்மதித்தால்!




உன் சோகத்தை எழுதப் பார்த்து
தோற்றுப்போகிறேன்!
ஆம். என் கண்களில் வழியும்
கண்ணீர் எழுத விடாமல்
மனசை பிசைகிறது!




உன்னைப் பார்க்க முடியால்
ஏங்கும் நாட்களில்,
உன் முகத்தை பார்த்த
திருப்தியை தருவது…
மலரே, இந்த மலர் தான்!



உன் விழிகளை
பார்த்து மீன் வருகிறது…
தன் குஞ்சுகளோ
என நினைத்து!




அதிசயம்…
தென்றல் குடை பிடித்து
இப்போது தான்
பார்க்கிறேன்!




அவைகள் மட்டும்
வெள்ளை புறாக்களாய்
இருந்திருந்தால்…
நீ ஒளித்து வைத்திருக்கும்
உன் பாதங்கள் தான்
அவை என்றிருப்பேன்!




அடிக்கடி பூகம்பம்
ஏற்படுகிறதே என்று
பூமியை
சாந்தப் படுத்துகிறாயோ…!?




என் இதயத்தை
கிழித்து பார்…
உன் ஒரு சொட்டு கண்ணீர்
எனக்குள் விஷமாய்
மாறியிருக்கும்!



                       
பள்ளி நாட்களில்
நான் விளையாடியதை
ஒரமாய் நின்று நீ ரசித்திருக்கிறாய்…
இப்போது என் மனசோடு
நீ விளையாடுவதை
என்னால் ரசிக்க முடியவில்லை!



நான் வேண்டும்
வரமெல்லாம்…
என் மீதான
உன் பார்வை ஒன்று மட்டுமே!




மழை என்றால் –
உனக்கு உற்சாகம்!
நீ என்றால் –
எனக்கு உற்சாகம்!




பூவே உன்னை
முத்தமிட ஆசைப்படும்
போது_
என்னை மட்டும்
ஏன் குறை சொல்கிறாய்?!




கனவில் நான்
வருவேன் என்று தான்
உறங்காமல் விழித்திருக்கிறாயோ…??




உன்னை ஒரு மலர் போல
உள்ளங்கையில் வைத்து
தாங்கத் தான் ஆசைப் பட்டேன்…
ஆனால், நீ
என் இதயத்தில் தானே
ஏறி நின்றாய்…!?




யாரோ ஒருவன்
உன் நெற்றியில்
வைத்த குங்குமம் தான்
என் வாழ்க்கையின்
முற்றுப்புள்ளியாய் ஆகிப்போனது…!




உன்னை தாயாகப் பார்க்கும்
பாக்யம் தான்
எனக்கு கிடைத்தது…
உன்னை தாயாக்கிப் பார்க்கும்
பாக்யம் கிடைக்கவில்லை!


கானல் நீர்
என்று தெரிந்தே
என் தாகத்துக்கு
குடிக்கிறேன்…
நீ இல்லை என்று அறிந்தே
உனக்காக காத்திருக்கிறேன்…


(என்ன சார்… ஏண்டா இவன் பதிவை படிக்க வந்தோம்முன்னு ஃபீல் பண்றிங்களா?... உங்களை விட்டா வேற யார்கிட்ட போய் என் மனபாரத்தை கொட்ட முடியும்?... சொல்லுங்க!)



சின்ன இடையில் மலர்ந்த கொடி…




இதயத்திற்கு
ரத்தம் போகும் பாதையில்
எனக்கு அடைப்பு இருக்கிறதாம்…
என் நெஞ்சோரமாய் வந்து
உன் மூச்சுக் காற்றை எனக்குள் விடு!
அடைப்பு, அடைப்பு குறிக்குள் போய்விடும்!




நீ இங்கே தான்
ஒளிந்திருக்கிறாய்…
அதனால் தான்
இந்த இடம் இவ்வளவு
அழகாய் இருக்கிறது…!




என் ஒவ்வொரு
எழுத்திலும் நீ தான்
ஒளிந்திருக்கிறாய்…
உன் சுவாசம் தான்
என் பேனாவில்
‘மை’யாய் ஆகிறது…!



 
கதிரவன் கூட
உன் முகத்தில் விழிக்க தான்
ஆசைப்படுகிறான்…
என்னைப் போலவே!



உடைகள் மாறினாலும் உன் உறங்கும்
அழகு மாறுவதில்லை.
அதை ரசிப்பதற்காகவே
விடியும் வரை விழித்திருப்பேன்…
உன் அருகில் நானிருக்க
நீ சம்மதித்தால்!




உன் சோகத்தை எழுதப் பார்த்து
தோற்றுப்போகிறேன்!
ஆம். என் கண்களில் வழியும்
கண்ணீர் எழுத விடாமல்
மனசை பிசைகிறது!




உன்னைப் பார்க்க முடியால்
ஏங்கும் நாட்களில்,
உன் முகத்தை பார்த்த
திருப்தியை தருவது…
மலரே, இந்த மலர் தான்!



உன் விழிகளை
பார்த்து மீன் வருகிறது…
தன் குஞ்சுகளோ
என நினைத்து!




அதிசயம்…
தென்றல் குடை பிடித்து
இப்போது தான்
பார்க்கிறேன்!




அவைகள் மட்டும்
வெள்ளை புறாக்களாய்
இருந்திருந்தால்…
நீ ஒளித்து வைத்திருக்கும்
உன் பாதங்கள் தான்
அவை என்றிருப்பேன்!




அடிக்கடி பூகம்பம்
ஏற்படுகிறதே என்று
பூமியை
சாந்தப் படுத்துகிறாயோ…!?




என் இதயத்தை
கிழித்து பார்…
உன் ஒரு சொட்டு கண்ணீர்
எனக்குள் விஷமாய்
மாறியிருக்கும்!



                       
பள்ளி நாட்களில்
நான் விளையாடியதை
ஒரமாய் நின்று நீ ரசித்திருக்கிறாய்…
இப்போது என் மனசோடு
நீ விளையாடுவதை
என்னால் ரசிக்க முடியவில்லை!



நான் வேண்டும்
வரமெல்லாம்…
என் மீதான
உன் பார்வை ஒன்று மட்டுமே!




மழை என்றால் –
உனக்கு உற்சாகம்!
நீ என்றால் –
எனக்கு உற்சாகம்!




பூவே உன்னை
முத்தமிட ஆசைப்படும்
போது_
என்னை மட்டும்
ஏன் குறை சொல்கிறாய்?!




கனவில் நான்
வருவேன் என்று தான்
உறங்காமல் விழித்திருக்கிறாயோ…??




உன்னை ஒரு மலர் போல
உள்ளங்கையில் வைத்து
தாங்கத் தான் ஆசைப் பட்டேன்…
ஆனால், நீ
என் இதயத்தில் தானே
ஏறி நின்றாய்…!?




யாரோ ஒருவன்
உன் நெற்றியில்
வைத்த குங்குமம் தான்
என் வாழ்க்கையின்
முற்றுப்புள்ளியாய் ஆகிப்போனது…!




உன்னை தாயாகப் பார்க்கும்
பாக்யம் தான்
எனக்கு கிடைத்தது…
உன்னை தாயாக்கிப் பார்க்கும்
பாக்யம் கிடைக்கவில்லை!


கானல் நீர்
என்று தெரிந்தே
என் தாகத்துக்கு
குடிக்கிறேன்…
நீ இல்லை என்று அறிந்தே
உனக்காக காத்திருக்கிறேன்…


(என்ன சார்… ஏண்டா இவன் பதிவை படிக்க வந்தோம்முன்னு ஃபீல் பண்றிங்களா?... உங்களை விட்டா வேற யார்கிட்ட போய் என் மனபாரத்தை கொட்ட முடியும்?... சொல்லுங்க!)




6 comments:

Yaathoramani.blogspot.com said...

கவிதைகள் அனைத்தும் மிக மிக அருமை
இத்தனை நாள் எப்படி பார்க்காமல் இருந்தோம் என ஃபீல்
பண்ணியது நிஜம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

சார், உங்கள் வாழ்த்திற்கும், பாராட்டிற்கும் நன்றி!

சுவேதா பாண்டியன், சென்னை. said...

அழகான படங்கள்...
அற்புதமான கவிதைகள்...
மனசை கொல்றிங்க பூங்கதிர்!
வாழ்க.. வளர்க..!

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

சுவேதா நிஜமா தான் சொல்றிங்களா?... நன்றி!

Riyas said...

அட அருமையான கவிதைகள் சார்..

எல்லாம் எளிய நடையில் அழகு..

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

Thamks...