விழிகளின் விளிம்பில்...
உன்னை விட
என்
பென்சில்அதிகம்
வெட்கப் படுகிறது...
உன்
அழகைப் பார்த்து!
நீ
புன்னகைக்காத
நாளில்
என் மனக்கொடி
அரைக்கம்பத்தில்
பறப்பது
உனக்குத் தெரியுமா...!?
என் இதயம்
துடிப்பது
தெரிகிறது...
உன்
விழிகளின் விளிம்பில்...!
போர்களத்தில்
மலர்ந்த
உதிராத பூ நீ...
உன் பாதம்பட்டால்
யுத்தபூமி கூட
சமாதான கொடியை
பறக்க விடுகிறது!
உன்னைப் பார்க்க
துடிக்கும்
விழிகளுக்குத் தெரியுமா...
நீ தான்
என் இமைகள் என்று??
என்
கனவில்
சிறகடிக்கும்
வண்ணத்து பூச்சி கூட
கருப்பாகவே...!
என் காதலை போல...?
உன்
உதட்டோரம்
பூக்கும்
மெல்லிய புன்னகையில்
என் இதயம்
கரைந்து போகிறது...!
உதட்டோரம்
பூக்கும்
மெல்லிய புன்னகையில்
என் இதயம்
கரைந்து போகிறது...!
என்
உறக்கத்தை களவாடிய உன் விழிகளில்
நான்
காணாமல் போகிறேன்!
உறக்கத்தை களவாடிய உன் விழிகளில்
நான்
காணாமல் போகிறேன்!
உன்னைப்
பார்த்துக்கொண்டே
இருக்க ஆசைப் படும்
போதெல்லாம்
நீ ஒளிந்தி கொள்கிறாய்.
அதனால் தான்...
என் விழிகளில்
சிறை வைக்க
முடியாத உன்னை
என் நினைவுகளில்
சிறை வைத்தேன்.
பார்த்துக்கொண்டே
இருக்க ஆசைப் படும்
போதெல்லாம்
நீ ஒளிந்தி கொள்கிறாய்.
அதனால் தான்...
என் விழிகளில்
சிறை வைக்க
முடியாத உன்னை
என் நினைவுகளில்
சிறை வைத்தேன்.
உன்
விழிகளுக்குள்
என்னை
விழிங்கி விட்டாய்...
உன்
உதடுகளுக்குள்
என்னை
மறைத்து வைத்தாய்...
உன் ஒற்றைக்கால்
தவம்
எந்த இதயத்தை
சிதைப்பதற்காக...?
நதியைப் போல
அழகானது...
தென்றலைப் போல
சுகமானது...
உனக்காக
காத்திருக்கும் தருணங்கள்!
காத்திருக்கும் தருணங்கள்!
ஈர விறகும்
உன்
சுட்டெரிக்கும்
பார்வை பட்டால்
கொழுந்து விட்டு
எரியதான் போகிறது...
தனிமையை
தொலைக்க மறந்தவள்
நீ,
அதனால் தானோ
இன்னும்
யாராலும் வாசிக்கப்படாத
புத்தகமாய்
நீ இருக்கிறாய்...!?
நீ
உறங்கும்
அழகில் தெரிகிறது...
உன் கனவில்
நான் தான்
என!
பற்றி எரியும்
நெருப்பை
அணைக்கலாம்
உன்
விரகதாபத்தை
நான் எப்படி
'அணைப்பது'....!?
(உங்க பொறுமையை சோதிச்சது போதும்ன்னு நினைக்கிறேன்... see u )
3 comments:
பொறுமைய ரொம்ப ஒண்ணும் சோதிச்சிரலை பூங்கதிர் ஸார்! நல்லாத் தான் குறுங்கவிதைகள் படைச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்! (படங்களை சிரத்தையாகத் தேர்ந்தெடுத்த உங்கள் உழைப்புக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு!)
எனக்கு
வேறென்ன
வரம் வேண்டும்...
உங்கள் வாழ்த்தை விட?!
OVVORU VARIYUM ARTHTHAMULLATHAY INIKKIRATHU. STILLS ARUMAI.
Post a Comment